விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டு தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்


விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டு தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்
x

விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டு தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்

தஞ்சாவூர்

விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டு தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சாவூா் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வக்கீல் ஜீவக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய குழுவினர் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் இதுவரை ஈரப்பதம் தளர்வு குறித்து குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை. உடனடியாக ஈரப்பதம் தளர்வு குறித்து மத்திய அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டயர் அறுவடை எந்திரங்களை வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வரவழைக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் போது விவசாயிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஆனால் இம்முறை இதுவரை விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. எனவே உடனடியாக காவிரி டெல்டா விவசாயிகளிடம் அமைச்சர்கள் குழு நேரடியாக சென்று கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

விவசாயிகளிடம் கேட்க வேண்டும்

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளில் மழை சேத பாதிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தூர் வாரும் பணியை தொடங்குவதால் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.

இதனால் தூர் வாரும் பணி முழுமையாக நடைபெறுவதில்லை. எனவே தூர்வாரும் பணியை எந்தெந்த வாய்க்கால் வெட்ட வேண்டும் என விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு உடனே தொடங்க வேண்டும், தஞ்சை மாவட்டத்தில் இது வரை ஒரு விவசாயிக்கு கூட 50 சதவீத வாடகையில் கதிர் அறுக்கும் எந்திரம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயி வீரராஜேந்திரன் :-கோனேரிராஜபுரம் வருவாய் கிராமத்தில் குடமுருட்டி ஆறு மூலம் பாசம் பெறும் வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளது. இவைகளை உடனடியாக தூர் வார வேண்டும். குடமுருட்டி ஆற்றில் வாயிலாக பாசனம் பெறும் வாய்க்கால்கள் தலைப்பில் இருந்து கோனக்கடுங்கால் ஆற்றில் சேர்வது வரையில் உள்ள வரைபடத்தை வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என்றார்.


Next Story