கட்டளை மாரியம்மன் கோவில் அருகே சேதம் அடைந்த நிலையில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறை


கட்டளை மாரியம்மன் கோவில் அருகே சேதம் அடைந்த நிலையில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறை
x

கட்டளை மாரியம்மன் கோவில் அருகே சேதம் அடைந்த நிலையில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறை சீரமைக்கப்படுவது எப்போது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருப்பூர்


கட்டளை மாரியம்மன் கோவில் அருகே சேதம் அடைந்த நிலையில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறை சீரமைக்கப்படுவது எப்போது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கட்டளை மாரியம்மன் கோவில்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது. சின்னாற்றின் கரையில் மாரியம்மன் சுயம்புவாக எழுந்திருளி இருக்கும் இந்த கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் காலங்காலமாக இங்கு பூஜைகள் செய்து வருகின்றனர். வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

உடை மாற்றும் அறை சீரமைக்கப்படுமா?

அதற்கு முன்பாக கோவிலுக்கு அருகே உள்ள சின்னாற்றில் சென்று பக்தர்கள் குளித்து வருகின்றனர். ஆனால் அங்கு கட்டப்பட்டுள்ள உடை மாற்றும் அறை புதர்மண்டி சேதம் அடைந்து உள்ளதால் அதை பயன்படுத்த முடியாத சுழலுக்கு பெண்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பெண்கள் கூறியதாவது:-

சின்னாற்றில் ஓடுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்துவிட்டு கரையில் அமைந்துள்ள மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுவதுடன் நோய்கள் அகலும் என்பது ஐதீகம். இதனால் நெடுந்தொலைவில் இருந்து நாங்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கிறோம். அப்போது ஆற்றில் குளித்துவிட்டு சேதம் அடைந்த அறைக்குள் சென்று உடை மாற்ற முடியாத சூழல் நிலவுகிறது.

இதற்கு பதிலாக அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று மாற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அப்போது புதரில் மறைந்துள்ள வனவிலங்குகளால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே கோடந்தூர் சின்னாற்றின் கரையில் சேதம் அடைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறையை சீரமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story