திருச்சி உறையூரில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்


திருச்சி உறையூரில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x

திருச்சி உறையூரில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது

திருச்சி

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் கொள்ளிடம் கிணறு மூன்று நீர்உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீர் உந்து குழாய், குடமுருட்டி பாலம் உறையூர் வழியாக 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோணக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்ற போது, குழாய் உடைந்தது. குழாயின் ஏற்பட்ட பழுதை நேற்று முதல் மாநகராட்சி பணியாளர்கள் சரிசெய்து வருகிறார்கள். இதனால் புத்தூர் பழைய மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், உறையூர் பழைய மற்றும் புதிய, பாரதிநகர், மங்கள நகர், பாத்திமா நகர், சிவா நகர், செல்வா நகர் மற்றும் ஆனந்தம் நகர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது. நாளை (திங்கட்கிழமை) வழக்கம் போல் குடிநீர் வினியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதை மாநகராட்சி மேயர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 More update

Next Story