திறந்த நிலையில் குடிநீர் தொட்டி


திறந்த நிலையில் குடிநீர் தொட்டி
x

திறந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை மூட வேண்டும்.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி மாநகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் வெம்பக்கோட்டை, சித்துராஜபுரம், வழியாக சொல்கிறது. குடிநீர் குழாய்கள் இணைப்புகள் பழுது அடையாமல் இருக்கவும், பழுதடைந்தால் சரி செய்வதற்காக, ஆங்காங்கே இணைப்பு குழாயை சுற்றி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தொட்டிகளின் மேல் பாகம் மூடப்படாமல் உள்ளது. வெம்பக்கோட்டை துணை மின் நிலையம் அருகில் குடிநீர் குழாய் முழுமையாக இணைக்கப்படாததால் தொட்டி நிறைந்து வெளியே தண்ணீர் தேங்கி குளம் போல் உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைய வாய்ப்புள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு குடிநீர் குழாயில் இணைப்பை சரி செய்யவும், தொட்டிகளின் மேல் பாகம் மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story