குடிநீர் வரியை 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை குடிநீர் வாரியம் தகவல்


குடிநீர் வரியை 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
x

யு.பி.ஐ., கியூ-ஆர் குறியீடு போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி வரி கட்டணங்களை செலுத்தலாம்.

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், கட்டணங்களையும் கடைசி நாளான வரும் 30-ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயங்கும். வரி மற்றும் கட்டணங்களை காசோலை மற்றும் வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகையினை https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையதள வங்கி மூலமாக செலுத்தலாம். இ-சேவை மையங்கள் மற்றும் யு.பி.ஐ., கியூ-ஆர் குறியீடு போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்களை செலுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story