ரூ.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி நகர்நல மையத்தில் ரூ.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் நகர் நல மையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 5 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு குடிநீர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகரசபை பொறியாளர் ரமேஷ், நகர்நல மைய டாக்டர் ஸ்ரீ குமாரி, நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தாமோதரன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ராமர், நகரசபை கவுன்சிலர் கவியரசன், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோடி சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.