டிரைவர் கைது
சீர்காழி அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பஸ் மோதியது
மயிலாடுதுறை அருகே கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை மகன் ராஜேஷ் (வயது 23). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் ஊராட்சி பழைய சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பஸ் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மேனாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் ( 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.