மணல் கடத்த முயன்ற லாரி டிரைவர் கைது
கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக மணல் கடத்த முயன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியரை போக்குவரத்து சோதனை சாவடியில் மண்டல பறக்கும் படை உதவி இயக்குனர் சத்தியசீலன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக எம்.சாண்டு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அனுமதி சீட்டில் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக எம்.சாண்டு மணல் கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக லாரி டிரைவர் திண்டுக்கல் அருகே உள்ள வெள்ளைக்கோடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ் குமார் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து, செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் மணலுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story