சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் கைது


சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் கைது
x

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 28). இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஜெயமூர்த்தியை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை மிரட்டல்

ஜெயங்கொண்டத்தை ேசர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் ஞானசேகரன் (35) என்பவர் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார். தான் அவருக்கு தங்கை முறை என பலமுறை கூறியும், அதை ஏற்காமல் அவர் தொந்தரவு செய்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி ஞானசேகரன் மற்றும் அவரது தாயார் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஞானசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story