பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது


பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

உணவு கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் மேற்பார்வையில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தனுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை பொள்ளாச்சி -உடுமலை ரோட்டில் நம்பியமுத்தூர் பிரிவு அருகில் சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ, எடை கொண்ட 24 சாக்கு மூட்டைகளில் சுமார் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையை சேர்ந்த டிரைவர் கலைச்செல்வன் (வயது 34) என்பது தெரியவந்தது. மேலும் குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story