போலி நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி டிரைவர் கைது


போலி நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி டிரைவர் கைது
x

புதுவண்ணாரப்பேட்டையில் போலி நகைைய அடகு வைத்து 2 கடைகளில் ரூ.2 லட்சம் மோசடி செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

புதுவண்ணாரப்பேட்டை,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நரேஷ் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 24-ந்் தேதி நரேஷ் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடையில் வயதான அவரது தந்தை சஜ்ஜன் மட்டும் இருந்தார்.

அப்போது கடைக்கு நன்கு அறிமுகமான அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன்(வயது 36) என்பவர் சுமார் 25 கிராம் நகையுடன் வந்து தனது தாயை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும், அவருக்கு ஆபரேசன் செய்வதற்காக உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும் கூறி நகையை அடகு வைத்து ரூ.92 ஆயிரம் வாங்கி சென்றார்.

போலி நகை

கடை உரிமையாளர் நரேஷ் கடைக்கு வந்து அந்த நகையை பரிசோதனை செய்த போது நகையின் கொக்கி, பட்டை போன்ற இடங்களை தவிர்த்து மற்றவைகள் எல்லாம் போலி என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து விசாரித்தனர். அதில் மணிகண்டன், இதே போன்று மற்றொரு அடகு கடையிலும் அதே நாளில் மற்றொரு போலி நகையை அடகு வைத்து ரூ.92 ஆயிரம் வாங்கியது தெரியவந்தது. கைதான மணிகண்டனை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story