குளத்தில் மூழ்கி டிரைவர் சாவு


குளத்தில் மூழ்கி டிரைவர் சாவு
x

கன்னியாகுமரி அருகே குளத்தில் மூழ்கி டிரைவர் சாவு

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 37), டிரைவர். நேற்று முன்தினம் இவர் அந்த பகுதியில் உள்ள ராஜேந்திரகிரி குளத்துக்கு குளிக்க சென்றார்.

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குளத்துக்கு குளிக்கச் சென்றபோது, அங்கு தமிழ்மணி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தமிழ்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்மணி குளத்தில் குளித்தபோது வலிப்புநோய் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story