கோயம்பேட்டில் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது வேன் மோதி டிரைவர் பலி - மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 2 பேர் காயம்


கோயம்பேட்டில் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது வேன் மோதி டிரைவர் பலி - மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 2 பேர் காயம்
x

கோயம்பேட்டில் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் பலியானார். மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை

சென்னை சூளைமேடு, வீரபாண்டி 3-வது தெருவைச் சேர்ந்தவர் மெய்இறை (வயது 39). மெட்ரோ ெரயில் நிர்வாகத்தில் கட்டுமான பணிக்கு ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வேனில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று அதிகாலை மெட்ரோ ெரயில் கட்டுமான பணிக்கு ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை வேனில் ஏற்றிக்கொண்டு சூளைமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு மேம்பாலம் அருகே சென்றபோது சாலையோராம் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது வேன் மோதியது.

இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. வேனை ஓட்டிவந்த மெய்இறை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேனில் பயணம் செய்த மெட்ரோ ரெயில் கட்டுமான தொழிலாளர்களான பாலச்சந்திரன் (26), ரமணா (28) ஆகிய இருவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலியான மெய்இறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story