வாகனம் மோதி டிரைவர் பலி


வாகனம் மோதி டிரைவர் பலி
x

பரதராமி அருகே வாகனம் மோதி டிரைவர் இறந்தார்.

வேலூர்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள குட்லவாரிபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜுலு (வயது 38), பால் வண்டி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

முனிராஜுலு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பரதராமியில் இருந்து குட்லவாரிப்பல்லி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்

சாமிரெட்டிப்பள்ளியை அடுத்த தனியார் கல்லூரி அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முனிராஜுலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண்காந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story