தடுப்புச்சுவர் மீது வேன் மோதி டிரைவர் பலி


தடுப்புச்சுவர் மீது வேன் மோதி டிரைவர் பலி
x

தடுப்புச்சுவர் மீது வேன் மோதி டிரைவர் உயிரிழந்தார்.

திருச்சி

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 20 பேர், அங்கிருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் நேற்று வந்தனர். அந்த வேனை சென்னை வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த பெரியசாமியின் மகன் கார்த்திகேயன்(வயது 32) என்பவர் ஓட்டினார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் டிரைவர் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேனில் பயணம் செய்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், டிரைவர் கார்த்திகேயன் வேனை ஓட்டி வந்தபோது, அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story