மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மாணவி கர்ப்பம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழமலை. இவரது மகன் செந்தில்குமார் (வயது 21). டிராக்டர் டிரைவரான இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்த ஒரு 17 வயதுடைய மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.
பின்னர், அந்த மாணவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இதனால் மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது தாய் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் டாக்டரிடம் காண்பித்தார். அப்போது அந்த மாணவி 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக டாக்டர் தெரிவித்தார்.
போக்சோவில் கைது
இது தொடர்பாக மாணவியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தார்.
இதே போல் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தால் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றனர்.