சுங்கச்சாவடி அருகே டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


சுங்கச்சாவடி அருகே டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

சுங்கச்சாவடி அருகே டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

சமயபுரம்:

தமிழ்நாடு உன் உரிமை வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஜெபஸ்டின்ராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நடராஜ், துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிரைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள் வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். கர்நாடக மாநிலத்தில் அத்திப்பள்ளி கோட்டாட்சியர் வசூல் வேட்டை மற்றும் ஒஸ்கொட்டா மாலூர் வழிப்பறி, உயிர்சேதம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியத்தில் டிரைவர்கள் இணைவதற்கும், அதில் உள்ள பலன்கள் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் செயலியை எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலங்கள் சென்று விபத்துக்குள்ளாகும் டிரைவர்களின் உடல்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story