தூறல் மழை


தூறல் மழை
x

தூறல் மழை பெய்தது.

அரியலூர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிதாக உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 'மாண்டஸ்' புயல் உருவாகி வலுப்பெற்றிருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்திருந்தது. மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யலாம் என்று கருதப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

தூறல் மழை

ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யவில்லை. நேற்று அதிகாலை முதல் காலை வரை குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பகல் நேரத்தில் சிலர் ஸ்வெட்டர், பனிக்குல்லா அணிந்திருந்ததை காணமுடிந்தது. மேலும் பகல் நேரத்தில் சில சமயம் லேசாக மழை தூறியது. வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இதனால் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யவில்லை. அரியலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தூறலாக மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

குளிர்ந்த காற்று

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். நேற்று காலையிலும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் தூறலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை அளவு விவரம்

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

பெரம்பலூா் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அகரம்சீகூர்-1, எறையூர்-1.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அரியலூர்-1, திருமானூர்-2, ஜெயங்கொண்டம்-6, செந்துறை-3.4, ஆண்டிமடம்-4.8.


Related Tags :
Next Story