11 ஊராட்சி ஒன்றிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண ெதாகை கிடைக்கும்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் தகவல்


11 ஊராட்சி ஒன்றிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண ெதாகை கிடைக்கும்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் தகவல்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆணை பிறப்பித்துள்ளதால் 11 ஊராட்சி ஒன்றிய விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண தொகை கிடைக்கும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறினார்.

ராமநாதபுரம்

அரசு ஆணை பிறப்பித்துள்ளதால் 11 ஊராட்சி ஒன்றிய விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண தொகை கிடைக்கும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறினார்.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டிற்கான வறட்சி நிவாரண தொகை வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 11 ஊராட்சி ஒன்றிய விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் உறுதியாக கிடைத்துவிடும். விவசாயிகளுக்கான நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும்.

மேலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கான பயிர் கடன் காலதாமதமின்றி வழங்கப்படும். கண்மாய், ஏரி மற்றும் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடன் உதவி

இதனை தொடர்ந்து மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 117 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.56 கோடிக்கான சுழல் நிதி கடன்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், வேளாண் இணை இயக்குனர் சரஸ்வதி, துணை இயக்குனர் பாஸ்கரமணியன், கூட்டுறவு சங்க மண்டல இணைபதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story