போதை ஒழிப்பு உறுதிமொழி
போதை ஒழிப்பு உறுதிமொழி
பரமக்குடி
பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வருவாய் தீர்வாயஅலுவலர் மற்றும் உதவி ஆணையர் (ஆயம்) மணிமாறன் தலைமை தாங்கினார். பரமக்குடி தாசில்தார் ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பபிதா பேகம், கோட்ட ஆய அலுவலர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பின்பு போதை பழக்கத்திற்கு ஆளான குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் நத்த நிலவரி திட்ட தனி தாசில்தார் சேகர், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், வட்ட தலைவர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.