அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை
கலவை
கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தரணிபாய் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் ஏழுமலை முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பரஞ்சோதி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரதாப் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். போதை பொருட்களுக்கு அடிமையாகினால் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதனால் விளைவுகளை பற்றியும் அவர் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கலவை தாசில்தார் சமீம், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம அதிகாரி ஸ்ரீதர் உள்பட ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story