மாணவ மாணவிகளுக்கு போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாணவ மாணவிகளுக்கு போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 Jun 2023 11:48 PM IST (Updated: 28 Jun 2023 2:38 PM IST)
t-max-icont-min-icon

மாணவ மாணவிகளுக்கு காவல் துறை சார்பில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

பனப்பாக்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நெமிலி போலீசார் சார்பில் போதை பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ் அசோக் கலந்துகொண்டு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிலு, லோகேஷ் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நாடகம் நடைபெற்றது.

காவேரிப்பாக்கம் போலீசார் சார்பில் காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலும், அவளூர் போலீசார் சார்பில் ஆயர்பாடி, மாமண்டூர், மேலபுலம் பள்ளிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிவேல் தலைமையிலும், பாணாவரம் போலீசார் சார்பில் பாணாவரம் மற்றும் மகேந்திரவாடி பள்ளிகளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சீனிவாசன் ஆகியோர் தலைமையிலும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story