போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கே.வி.குப்பம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில்போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. முதல்வர் மு.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் மு.மேகராஜன் வரவேற்றார்.
கருத்தரங்கில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் உதவி பேராசிரியர் சி.சிவக்கொழுந்து, வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை மாவட்ட மனநல திட்ட மருத்துவர் சிவாஜிராவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். விழாவை ஒருங்கிணைப்பாளர் வே.வினாயகமூர்த்தி தொகுத்து வழங்கினார். முடிவில் செஞ்சுருள் சங்க உறுப்பினர் எஸ்.செல்வராஜ் நன்றி கூறினார்.
Image1 File Name : 13974721.jpg
----
Reporter : R. VENUGOPAL Location : Vellore - VELLORE SUB-URBAN - K.V. KUPPAM