போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான்


போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான்
x

சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வதேச இளைஞர்கள் தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே எய்ட்ஸ், காச நோய் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ரெட் ரன் மாரத்தான் நடைபெற்றது. இதற்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா ரெட் ரன் மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் கல்லூரி மாணவ- மாணவிகள், ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர். சேகர், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story