திருவள்ளூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு


திருவள்ளூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி; மாணவ, மாணவியர் பங்கேற்பு
x

திருவள்ளூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர்

தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருவதை கருத்தில் கொண்டு அதை கட்டுப்படுத்தி போதையில்லா தமிழகத்தை உருவாக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இணைந்து கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து அதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 'போதையில்லா திருவள்ளூர் மாவட்டம்' என்பதை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட சுமார் 1000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. முன்னதாக மாரத்தான் போட்டியை திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அருகில் இருந்து சிறுவனூர் வரை சி.டி.எச்.சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Next Story