போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்
அரசு பள்ளிகளில் போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் கிணத்துக்கடவு, கோவில்பாளையம், சிக்கலாம்பாளையம், கொண்டம்பட்டி, அரசம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் கல்லூரிகள் என 14 இடங்களில் போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதனை கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், சுந்தரமூர்த்தி, செந்தில்குமார், ஜெயராஜ் மற்றும் போலீசார் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை போலீசார் வாசிக்க, பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் சுல்தான்பேட்டை, மேட்டுலட்சுமி நாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், செஞ்சேரி, செஞ்சேரிமலை உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.