போதையில்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


போதையில்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Aug 2023 9:45 PM GMT (Updated: 11 Aug 2023 9:45 PM GMT)

வால்பாறை அரசு கல்லூரியில் போதையில்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கோயம்புத்தூர்


வால்பாறை


தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதையில்லா தமிழ்நாடு உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய தீமைகள், சமுதாய சீரழிவுகள், குடும்ப வாழ்க்கை, தனி மனித வாழ்க்கை பாதிப்பு மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதில் நான் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன். எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள், நண்பர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாக விடமாட்டேன். போதைப்பொருள் உற்பத்தி, பயன்பாட்டிற்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவன் ராஜ் தலைமையில் மாணவ-மாணவிகள் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



Next Story