திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் - சுகாதார பணிகள் துணை இயக்குனர் தலைமையில் நடந்தது


திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் - சுகாதார பணிகள் துணை இயக்குனர் தலைமையில் நடந்தது
x

திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்து துறைகளிலும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில் திருவள்ளூரில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள மருந்தக உரிமையாளர்களுக்கான போதை தடுப்பு மருந்துகள் மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் சுடலைவேல் முருகையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குனர் மருந்து கட்டுப்பாட்டுத்துறை மற்றும் மருந்து ஆய்வாளர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மயக்கவியல் மருந்துகளை வழங்ககூடாது. போதை தரக்கூடிய மருந்துகளை, போதைக்கு அடிமையாக்கும் தன்மையுள்ள மருந்துகளை மாணவ மாணவிகளுக்கு வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து மருந்தக உரிமையாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். சட்ட விரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.


Next Story