பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்


பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
x
தினத்தந்தி 25 Jun 2022 12:47 PM IST (Updated: 25 Jun 2022 12:47 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க,'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0'என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டது.

அதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போதை பொருட்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தொடர்ச்சியாக இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துவந்தனர். இதனால் கஞ்சா, குட்கா போதை பொருட்களின் நடமாட்டம் வெகு அளவில் குறைந்து உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், குற்றவாளிகளை பிடிக்கும் போதே கஞ்சா போதையில் இருக்கின்றனர். போதைப்பொருள் பயன்பாடு குறித்த சர்வே ஒன்று எடுக்க இருக்கிறோம்.

கஞ்சா மட்டுமல்லாமல் குட்கா, மாவா பயன்பாடுகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.


Next Story