12 டன் முருங்கைக்காய் வரத்து


12 டன் முருங்கைக்காய் வரத்து
x

12 டன் முருங்கைக்காய் வரத்து

திருப்பூர்

வீ.மேட்டுப்பாளையம்

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 12 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றை வாங்குவதற்கு வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், வைரமடை, தென்னிலை பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர். அதன்படி ஒரு கிலோ மரமுருங்கைக்காய் ரூ.7-க்கும், கரும்பு முருங்கைக்காய் ரூ.11-க்கும், செடி முருங்கைக்காய் ரூ.8-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த தகவலை முருங்கைக்காய் வியாபாரி செல்லப்பன் தெரிவித்தார்.


Next Story