தொடர் விடுமுறை...சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்லத்தொடங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
நாட்டின் சுதந்திரதினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சுதந்திரதினம் என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் கோயம்பேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு, பெருங்களத்தூர், செங்கல்பட்டு சுங்கச்சாவடி உள்பட பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story