தொடர் மழையால் நிரம்பிய மீனாட்சிபுரம் கண்மாய்


தொடர் மழையால்  நிரம்பிய மீனாட்சிபுரம் கண்மாய்
x

தொடர் மழையால் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கண்மாய் நிரம்பி வழிந்தது

தேனி

போடி அருகே அம்மாபட்டி ஊராட்சியில் மீனாட்சிபுரம் கண்மாய் உள்ளது. இந்த குளத்திற்கு கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிள்ளையார் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. இதன் மூலம் 30 கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக போடி பகுதியில் தொடர்ந்து மழை ெபய்து வருகிறது. இந்த மழை காரணமாக கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கண்மாய் நிரம்பி வழிந்து கடல் போல் காட்சி அளிக்கிறது.


Next Story