வரத்து குறைவால் தேங்காய் சிரட்டை விலை உயர்வு


வரத்து குறைவால் தேங்காய் சிரட்டை விலை உயர்வு
x

வரத்து குறைவால் தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகளூர், கொங்குநகர், மூலிமங்கலம், பழமாபுரம், புன்னம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். பின்னர் தேங்காய் விளைந்தவுடன் பறித்து தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கைகளை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story