வரத்து குறைவால் பூக்கள் விலை உயா்வு


வரத்து குறைவால் பூக்கள் விலை உயா்வு
x

வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்குவிளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பூக்களின் வரத்து குறைவாலும், திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் உள்ளதாலும் பூக்கள் விலை‌ உயர்ந்துள்ளது. அதன்படி குண்டு மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், அரளி ரூ.280- க்கும், ரோஜா ரூ.280-க்கும், முல்லைப் பூ ரூ.1500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும் விற்பனையானது.

1 More update

Next Story