வரத்து குறைவால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
வரத்து குறைவால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரூர்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.150-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ150-க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.250-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைந்ததாலும், ஐப்பசி மாத வளர்பிறையையொட்டி கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story