பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்


பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
x

கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு ரோப் கார் மூலம் அவர் பயணம் செய்தார்.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகரை வணங்கிவிட்டு, மதியம் 12 மணி உச்சிகால பூஜையில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து துர்கா ஸ்டாலின் ரோப் கார் மூலம் மலையில் இருந்து கீழே இறங்கி தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.


1 More update

Next Story