ஈரோட்டில் துவரம் பருப்பு விலை உயர்வு- இல்லத்தரசிகள் கலக்கம்


ஈரோட்டில் துவரம் பருப்பு விலை உயர்வு- இல்லத்தரசிகள் கலக்கம்
x

ஈரோட்டில் துவரம் பருப்பு விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஈரோடு

ஈரோட்டில் துவரம் பருப்பு விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

துவரம் பருப்பு

ஈரோடு மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்த ஆண்டு பருப்பு வகைகளின் விளைச்சல் குறைவு காரணமாக விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்தது. குறிப்பாக துவரம் பருப்பை சாம்பார் உள்பட சமையலுக்கு அதிகமாக இல்லத்தரசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.153-க்கு விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு, இந்த மாதம் மொத்த விற்பனையில் ரூ.174-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.180-க்கும் விற்பனையாகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.20 உயர்ந்தது.

மளிகை பொருட்கள் விலை

துவரம் பருப்பு விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்து உள்ளனர். மற்ற பருப்பு வகைகளின் விலை அதே விலையில் நீடிக்கிறது. அதேசமயம் சமையல் எண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.5 வரை குறைந்து உள்ளது.

ஈரோட்டில் மளிகை பொருட்களின் விலை விவரம் மொத்த விற்பனையில் வருமாறு:-

கடலை பருப்பு - ரூ.82, உளுந்தம் பருப்பு - ரூ.136, பாசி பருப்பு - ரூ.119, பாசி பயறு - ரூ.125, உடைத்த உளுந்தம் பருப்பு - ரூ.126, சிவப்பு மைசூரு பருப்பு - ரூ.78, தட்டை பயறு - ரூ.63, காய்ந்த மிளகாய் - ரூ.270, கடுகு சிறியது - ரூ.75, கடுகு பெரியது - ரூ.65, சீரகம் - ரூ.733, வெந்தயம் - ரூ.98, தோசை புளி - ரூ.130, உதிர்ந்த புளி - ரூ.180, வெள்ளை சுண்டல் - ரூ.126 முதல் ரூ.170 வரை, கருப்பு சுண்டல் - ரூ.70 முதல் ரூ.95 வரை விற்பனையாகிறது.

கடலை எண்ணெய் (ஒரு லிட்டர்) - ரூ.195, நல்லெண்ணெய் - ரூ.298, தேங்காய் எண்ணெய் - ரூ.175, சூரியகாந்தி எண்ணெய் - ரூ.105, பாமாயில் - ரூ.86-க்கு விற்பனையாகிறது.


Next Story