'தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வர்' - கமல்ஹாசன்


தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வர் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 7 Nov 2023 1:52 PM IST (Updated: 7 Nov 2023 1:57 PM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அவர், 'கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு' என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், 'இனிய நண்பரும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story