விழுப்புரம் கோட்ட அளவிலானமின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்


விழுப்புரம் கோட்ட அளவிலானமின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.

விழுப்புரம்


விழுப்புரம் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் நடக்கிறது. விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) 1-ந் தேதியும், கண்டமங்கலம் கோட்ட குறைகேட்பு கூட்டம் 8-ந் தேதியும், செஞ்சி கோட்ட குறைகேட்பு கூட்டம் 16-ந் தேதியும், திண்டிவனம் கோட்ட குறைகேட்பு கூட்டம் 22-ந் தேதியும் நடக்கிறது. எனவே மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள், இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளன்று குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.

இந்த தகவல் மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story