மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
x

காட்பாடியில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மின்பகிர்மான வட்டம், காட்பாடி கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைத்தீர்வு கூட்டம் காட்பாடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் மதியழகன் தலைமை தாங்கினார். காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா முன்னிலை வகித்தார்.

இதில் காங்கேயநல்லுார் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் கொடுத்த மனுவில், விவசாய நிலத்துக்கு எனது பெயரில் மின் இணைப்பு இலவசமாக பெற்றுள்ளேன். ஆனால் கணினியில் என் பெயர் பதிவாகவில்லை. எனவே எனது பெயரை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து குறைத்தீர்வு கூட்டத்தில் மனுக்கள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் காட்பாடி கோட்டத்தை சேர்ந்த உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story