தமிழக அரசின் சார்பில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இணையவழி கருத்தரங்கம்
தமிழக அரசின் சார்பில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இணையவழி கருத்தரங்கம் நாளை மறுநாள் நடக்கிறது.
சென்னை,
சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இணையவழி கருத்தரங்கம் வரும் 23.12.2022 (காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை) வழங்க உள்ளது.
இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள் - இணையதளத்தை உருவாக்குதல் - டொமைன் பெயர் உருவாக்குதல் & ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் நன்மைகளை விளக்குதல். இப்பயிற்சி பற்றிய கூடுதல் வி=வரங்களை பெற விரும்புவோர் www.editn.in
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. 044-22252081/22252082 / 9677152265, 8668102600. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.