மின்பகிர்மான மின்சார குழு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மின்பகிர்மான மின்சார குழு கூட்டம் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மின் பகிர்மான 3-வது மின்சார குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட மின்சார குழு தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் மின்சார துறை சார்பில் செய்யப்பட உள்ள மேம்பாட்டு பணிகள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் குழு தலைவர் மத்திய அரசின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்திற்காக முழுமையாக பயன்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மின்துறை மூலம் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக கோரிக்கை வைத்தார்.
கோரிக்கை தொடர்பாக குழு ஒருங்கிணைப்பாளர் மேற்பார்வை பொறியாளர் பழனிராஜு விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, செயற்பொறியாளர் (வளர்ச்சி) ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.