12 கிணறுகளில் மின்இணைப்பு துண்டிப்பு
தாராபுரம் அருகே இலவச மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடியதாக 12 கிணறுகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.
ஆய்வு
தாராபுரம் அருகே முண்டு வேலம்பட்டி, நாரணாபுரம் மற்றும் சில பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு தண்ணீர் திறக்கும் போது அவை கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்லாமல் தடைப்பட்டு வந்தது. இது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனை வாய்க்காலில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது இலவச மின்சாரத்தை பயன்படுத்தி சில விவசாயிகள் தண்ணீரை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பொதுப்பணி12 கிணறுகளில் மின்இணைப்பு துண்டிப்புத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறைகேடாக தண்ணீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்க கோரி வழக்கு தொடுத்தனர். இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் விவசாயிக்கு நேரடியாக கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல வேண்டும் அவ்வாறு அதனை தடுத்து திருடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையினருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
அதன் பேரில் முறையற்ற முறையில் தண்ணீர் திருட்டுக்கு இலவச மின்சாரத்தை பயன்படுத்துவோரின் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் முண்டு வேலம்பட்டி பகுதியில் கதிர்வேல், சண்முகம், பழனிசாமி உள்ளிட்ட 12 விவசாய கிணற்றில் உள்ள இலவச மின் இணைப்பு துண்டிக்க பொதுப் பணித் துறையினர் வருவாய்த்துறை மற்றும் போலீசார் உதவியுடன் மின்வாரியத்தினர் வந்தனர்.
நீதிமன்ற உத்தரவு படி தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசன், தாசில்தார் கோவிந்தசாமி, மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள், தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மேற்பார்வையில் 50 மேற்பட்ட போலீசார் உதவியுடன் குண்டடம் மற்றும் குடிமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் முண்டுவேலாம்பட்டியில் 12 விவசாயிகளின் விவசாய கிணற்று மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.