அக்னிபத் எதிரொலி: மெரினா காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
சென்னை,
ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகாரில் ரயில்கள், பஸ்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொழுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், ராஜஸ்தான், அரியானா, தெலுங்கான உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்து வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story