ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!


ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!
x

கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை,

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார்.

அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார் கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, பென்ஜமீன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Next Story