பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை?
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து நாளை(வெள்ளிக்கிழமை) நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதைபோல அண்ணாமலையின் நடைபயணத்தில் பா.ம.க.வும் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story