டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி...!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை,
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. எனவே அவருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்கிறார்.
மேலும் புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story