தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது: அருணா ஜெகதீசன் ஆணையம்


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது: அருணா ஜெகதீசன் ஆணையம்
x

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

ஸ்டெர்லெட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்றும், நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில், "துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால் அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தெரிவித்தனர். எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அப்போது பழனிசாமி கூறியது தவறானது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story