தர்மபுரி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


தர்மபுரி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x

இடைக்கால பொதுச்செயலாளராகி முதல் முறையாக தர்மபுரி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தர்மபுரி

இடைக்கால பொதுச்செயலாளராகி முதல் முறையாக தர்மபுரி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக முன்னாள் முதல்- அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராகி முதல் முறையாக நேற்று தர்மபுரி வந்தார்.

அவருக்கு மாவட்ட எல்லையான தொப்பூர் சுங்கச்சாவடியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாநில இளைஞர் பாசறை இணைச் செயலாளர் கே.பி.ஆனந்த், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பூரண கும்ப மரியாதை

தொடர்ந்து அதியமான்கோட்டை வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு 4 குழந்தைகளுக்கு தனது பெயரை சூட்டினார். பின்னர் இலக்கியம்பட்டி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் 300 பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

இந்த மரியாதையை பெற்றுக் கொண்ட அவர் தர்மபுரி நகருக்கு வந்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மேள தாளங்கள் முழங்க அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அளித்த வரவேற்பை பெற்று கொண்டு பேசினார்.

சிலைகளுக்கு மரியாதை

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பூங்கொத்து மற்றும் பொன்னாடைகளை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் தர்மபுரி 4 ரோடு, பழைய தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், நகர செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.சி.பழனி, சி.கோபால், மதிவாணன், செந்தில், விஸ்வநாதன், சேகர், முருகன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், செல்வராஜ், வேலுமணி, செந்தில்குமார், நீலாபுரம் செல்வம், அன்பு, தனபால், ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாணிக்கம், கூட்டுறவு சர்க்கரை இயக்குனர் ரவிசங்கர், டாக்டர் சந்திரமோகன், பேரூராட்சி செயலாளர்கள் கோவிந்தசாமி, ராஜா, தென்னரசு, சந்தோஷ், பாபு என்கிற அறிவழகன், தனபால், காந்தி, சுப்ரமணியம், லலிகம் கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ், தொழிலதிபர் ரத்தினவேல், கிளைச் செயலாளர் சிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story