நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்தால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார்-அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்தால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார்-அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் பேச்சு
x
தினத்தந்தி 2 Sept 2023 1:53 AM IST (Updated: 2 Sept 2023 1:56 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்தால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்- அமைச்சராக வருவார் என்று அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் கூறினார்.

சேலம்

சூரமங்கலம்:

ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

பாலசுப்ரமணியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர்

கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசியதாவது:- மதுரை மாநாட்டில் புரட்சி தமிழர் என்ற பட்டத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியதற்கு மாநகர் மாவட்டம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் எந்த கட்சியும் நடத்திராத அளவில் மாநாட்டை நடத்தி முடித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தலும் வர வாய்ப்புள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் நாம் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.

மீண்டும் முதல்- அமைச்சர்

கடந்த 4 மாத காலமாகவே பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்து பணியை தொடங்கி விட்டோம். பூத் கமிட்டியின் நிர்வாகிகளை நியமனம் செய்யும் போது கட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களை நியமிக்க வேண்டும். இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து அந்த பொறுப்பாளர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்பி உள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்தால் எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் வருவார்.

இவ்வாறு ஜி.வெங்கடாஜலம் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் உமாராஜ், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்கென்னடி, பட்டு ராமச்சந்திரன், சரோஜா, பகுதி செயலாளர்கள் மாரியப்பன், பாலு, சரவணன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், முருகன், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா செல்வராஜ், சார்பு அணி செயலாளர்கள் நெத்திமேடு முத்து, சரவணன் மணி, ராம்ராஜ், ஈஸ்வரன், வீரக்குமார், , கனகராஜ், , மாமன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தனன், ஆணை வரதன் மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story